வேலை கேட்டு போராட்டம்: பெட்ரோல் பாட்டிலுடன் தண்ணீர் தொட்டி மீது ஏறிய உடற்கல்வி ஆசிரியைகள்


வேலை கேட்டு போராட்டம்: பெட்ரோல் பாட்டிலுடன் தண்ணீர் தொட்டி மீது ஏறிய உடற்கல்வி ஆசிரியைகள்
x

Image Courtesy: ANI

பஞ்சாப்பில் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் வேலை தரக்கோரி தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொகாலி,

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது உடற்கல்வி ஆசிரியர்கள் 646 பேருக்கு அரசு பள்ளிகளில் பணி வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், அரசு உறுதியளித்தப்படி தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என தண்ணீர் தொட்டி மீது ஏறி 2 பெண் உடற்கல்வி ஆசிரியைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மொகாலியில் உள்ள சோஹானா பகுதியில், சிப்பி ஷர்மா மற்றும் வீர்பால் கவுர் என்ற ஆசிரியைகள் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வருகின்றனர்.

இது குறித்து தண்ணீர் தொட்டி மீது இருந்தாவாறே ஆசிரியயை சிப்பி சர்மா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எங்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், ஆம்ஆத்மி எங்களுக்கு வேலை வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், ஆம்ஆத்மி அரசு அமைந்து 7 மாதங்கள் கடந்த பிறகும், எங்களுக்கு பொய் உத்தரவாதம் தான் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story