செந்தில்பாலாஜிக்கு எதிரான சம்மன் ரத்து: அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு உரிய அமர்வு முன் பட்டியலிடப்படும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


செந்தில்பாலாஜிக்கு எதிரான சம்மன் ரத்து: அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு உரிய அமர்வு முன் பட்டியலிடப்படும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான சம்மன் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உரிய அமர்வுமுன் பட்டியலிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,


தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர். அப்போது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது கடந்த 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி மீது வழக்கு தொடர்ந்தது.


இதுதொடர்பாக ஆஜராகும்படி சம்மனும் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து செந்தில்பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த நீதிபதி, அமலாக்கத்துறை சம்மனை ரத்துசெய்து உத்தரவிட்டார்.


இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்ரமணியன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, 'இதே விவகாரம் தொடர்புடைய மற்றொரு மனு நீதிபதி கிருஷ்ண முராரி தலைமையிலான அமர்வுமுன் பட்டியலிடப்பட்டு இருப்பது' அமலாக்கத்துறை சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.


இதை ஏற்ற சுப்ரீம்கோர்ட்டு, இந்த மேல்முறையீட்டு மனுவை உரிய அமர்வு முன் பட்டியலிடவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்புடைய மனுக்களுடன் இணைக்கவும் உத்தரவிட்டது.திபதி கிருஷ்ண முராரி தலைமையிலான அமர்வு முன் பட்டியலிடப்பட்டு இருந்த மனு மீதான விசாரணை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது


Next Story