பெண்கள் உடைமாற்றும் அறையில் வீடியோ எடுத்த ஸ்கேன் சென்டர் ஊழியர் கைது


பெண்கள் உடைமாற்றும் அறையில் வீடியோ எடுத்த ஸ்கேன் சென்டர் ஊழியர் கைது
x

காலில் ஏற்பட்ட காயம் தொடர்பான சிகிச்சைக்காக அந்த பெண் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் தனது காலில் ஏற்பட்ட காயம் தொடர்பான சிகிச்சைக்காக ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார்.

ஸ்கேன் எடுப்பதற்கு முன் உடையை மாற்றும்படி கூறியுள்ளனர். இதையடுத்து, ஸ்கேன் சென்டரில் உள்ள உடைமாற்றும் அறைக்கு சென்று அந்த பெண் உடையை மாற்றியுள்ளார்.

அப்போது, உடைமாற்றும் அறையில் ரகசியமாக செல்போன் வைக்கப்பட்டிருந்ததும் அதில் கேமரா மூலம் வீடியோ பதிவாகிக்கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அந்த செல்போனை எடுத்த அப்பெண் அதில் தான் உடைமாற்றுவது தொடர்பாக பதிவான வீடியோவை நீக்கினார். பின்னர், இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் மூலம் வீடியோ எடுத்த ஸ்கேன் சென்டரில் பணியாற்றி வரும் அன்ஜித் (வயது 24) என்ற இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story