ரடிவு கொலை வழக்கில் சரணடைந்த 8 பேர், சிவமொக்கா ஜெயநகர் போலீஸ் வசம் ஒப்படைப்பு


ரடிவு கொலை வழக்கில் சரணடைந்த  8 பேர், சிவமொக்கா ஜெயநகர் போலீஸ் வசம் ஒப்படைப்பு
x

ரடிவு கொலை வழக்கில் சரணடைந்த 8 பேர், சிவமொக்கா ஜெயநகர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா டவுனை சேர்ந்தவர் ஹந்தி அண்ணி. ரவுடியான இவர், கடந்த 14-ந்தேதி வினோபா நகர் போலீஸ் சவுக் பகுதியில் நடந்து சென்றபோது மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வினோபா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.

இந்த நிலையில் ரவுடி ஹந்தி அண்ணி கொலை வழக்கில் 8 பேர், சிக்கமகளூரு டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தனர். அதன்பேரில் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கார்த்திக், நிதின், சந்தன், மதன், பரூக், ஆஞ்சநேயா, மதுசூதன் மற்றும் மற்றொரு மதன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், சரணடைந்த 8 பேரையும் சிவமொக்கா வினோபாநகர் போலீஸ் வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் வினோபா நகர் பகுதியில் ரவுடி ஹந்தி அண்ணியின் உறவினர்களால், கைதானவர்களுக்கு ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் 8 பேரையும், ஜெயநகர் போலீஸ் வசம் ஒப்படைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்றுமுன்தினம் இரவு 8 பேரும், சிவமொக்கா ஜெயநகர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 8 பேரிடமும், ஜெயநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story