திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் மோடி - ராகுல்காந்தி விமர்சனம்
திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்ற பிரதமரால் இந்த பேரழிவுகளை என்றும் மறைக்க முடியாது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.எல்ஐசி., -ன் மதிப்பு 17 பில்லியன் டாலர் குறைந்து போனது.
மொத்த வியாபார விலை பணவீக்கம் 30 வருடங்களில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.வேலையில்லா திண்டாட்டம் என்றும் இல்லாத வகையில் உயர்வு. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய டி.எச்.எப்.எல் வங்கியில் மோசடி நடந்துள்ளது.
மக்கள் இங்கு தவித்துக் கொண்டிருக்கும் போது பிரதமர் மக்களை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story