டெல்லியில் வீட்டின் அருகே விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராகுல் காந்தி
நாடாளுமன்றம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவருக்கு ராகுல் காந்தி உதவி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் 2-வது நாளாக இன்று நடைபெற்று வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்பதற்காக காலை 11.45 மணியளவில் தனது வீட்டில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காரில் புறப்பட்டார்.
வீட்டை விட்டு வெளியே வந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டி ஒருவரை பார்த்து தனது காரை ராகுல் காந்தி நிறுத்த சொன்னார். பின்னர் காரை விட்டு இறங்கி வாகன ஓட்டியின் அருகில் சென்று அவரை தூக்கி விட்டு நலம் விசாரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story