சகோதரி பிரியங்காவுடன் பனிச்சண்டையிட்டு அன்பை பகிர்ந்த ராகுல்காந்தி...!


சகோதரி பிரியங்காவுடன் பனிச்சண்டையிட்டு அன்பை பகிர்ந்த ராகுல்காந்தி...!
x

சகோதரி பிரியங்கா காந்தி மீது ராகுல் பனிக்கட்டியை சண்டையிட்டு அன்பை பகிர்ந்தார்.

ஸ்ரீநகர்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை நேற்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைந்தது.

4 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நேற்று நிறைவடைந்தது. மொத்தமாக 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை நிறைவடைந்தது.

யாத்திரையின் இறுதி நாளான நேற்று ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி ராகுல்காந்தி தனது யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

முன்னதாக, யாத்திரையின் இறுதி நாளானான நேற்று காலை ராகுல்காந்தி யாத்திரை முகாமில் இருந்து வெளியே வந்தார். அப்போது முகாமிற்கு வெளியே ராகுல்காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி காத்திருந்தார்.

அப்போது, ராகுல்காந்தி தனது கை நிறைய பனிக்கட்டியை மறைத்து எடுத்துவந்து தனது சகோதரி அருகே வந்த உடன் அவர் தலையில் அந்த பனிக்கட்டியை வீசினார். இதை சற்றும் எதிர்பாராத பிரியங்கா காந்தி ஆரவாரமடைந்து அன்பில் திளைத்தார். பனிக்கட்டியை வீசிவிட்டு ராகுல்காந்தி மகிழ்ச்சியுடன் ஓடியநிலையில் அவரை விரைந்து சென்று பிடித்த பிரியங்கா காந்தி தனது உதவியாளர் கொடுத்த பனிக்கட்டியை தனது சகோதரர் ராகுல்காந்தியின் தலையில் வீசினார். இருவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Next Story