மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பது முக்கியம் - ராகுல்காந்தி


மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பது முக்கியம் - ராகுல்காந்தி
x

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பது முக்கியம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

இம்பால்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. மணிப்பூரின் கராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தியை பிஷ்ணபூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் காவல்துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து இம்பால் திரும்பினார் ராகுல்காந்தி.

இந்தநிலையில், ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தான் முதன்மையானது. ஒற்றுமையாக இருப்பதே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.


Next Story