பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
புதுடெல்லி,
குஜராத் முதல்-மந்திரியாக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி.யும்,மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் நரேந்திர மோடி ஜி. நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story