ராகுல்காந்தி பாதயாத்திரை நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை


ராகுல்காந்தி பாதயாத்திரை நடைபெற உள்ள நிலையில்   காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில்   சி.பி.ஐ. அதிரடி சோதனை
x

ராகுல்காந்தி பாதயாத்திரை நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி உள்ளது. சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள்.

பெங்களூரு: ராகுல்காந்தி பாதயாத்திரை நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி உள்ளது. சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள்.

சி.பி.ஐ. சோதனை

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே. சிவக்குமார். சட்டவிராத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை நாளை கர்நாடகம் வரவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள டி.கே சிவக்குமாருக்கு சொந்தமான வீடு, தோட்டத்து வீடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் திடீரென்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கனகபுரா தாசில்தார் மற்றும் போலீசார் உடன் வந்திருந்தனர். 8 சி.பி.ஐ. அதிகாரிகள் டி.கே. சிவக்குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

ஆவணங்கள் பரிசீலனை

டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், அவரது சொத்து மதிப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் கேட்டு அறிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவரது வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 5 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனையை அதிகாரிகள் நடத்தி இருந்தார்கள்.

இந்த சம்பவம் கனகபுராவில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நேற்று இரவு பெங்களூருவில் டி.கே சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், எனக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எனக்கு சம்பந்தப்பட்ட சொத்து சொத்து ஆவணங்களை பரிசீலனை நடத்தியுள்ளனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு என் மீது அன்பு அதிகம். என்னை மட்டும் குறி வைத்து நடத்தப்படும் இந்த சோதனையால் மனதளவால் பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.


Next Story