"ராகுல் காந்தி டி-சர்ட் விலையை கூறினால் உங்களுக்கு சிரிப்பு வரும்"- காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்


ராகுல் காந்தி டி-சர்ட் விலையை கூறினால் உங்களுக்கு சிரிப்பு வரும்- காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்
x

Image Courtesy: ANI 

ராகுல் காந்தி ரூ.41 ஆயிரம் மதிப்புள்ள டிஷர்ட் அணிந்து இருப்பதாக பாஜக விமர்சித்து இருந்தது.

புதுடெல்லி,

பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி ரூ 41 ஆயிரம் மதிப்புள்ள டிஷர்ட் அணிந்து இருப்பதாக பாஜக விமர்சித்து இருந்தது. பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தது.

முதல் புகைப்படத்தில் ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்தது போன்ற ஒரு டி-ஷர்ட்டின் விலையை குறிக்கும் படம். அந்த படத்தில் பர்பரி டி-ஷர்ட்டின் விலை ரூ.41.257 என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து இருந்த காங்கிரஸ், பிரதமர் மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோர்ட் அணிந்து இருந்ததாக விமர்சித்து இருந்தது.

இந்த நிலையில் ராகுல் காந்தி டிஷர்ட் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பேசியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி பொய்களின் தொழிற்சாலை'யை நடத்தி வருவதாகவும், பணவீக்கம், விலைவாசி உயர்வு, சமூகப் பிரச்னைகள் போன்ற உண்மையான பிரச்னைகளைப் பற்றி பேச ஆளும் கட்சி பயப்படுவதாகவும் கூறினார். .

ராகுல் காந்தியின் ரூ.41,000 டி-சர்ட் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "இது ஒரு குழந்தைத்தனமான கருத்து. டி-சர்ட் எங்கே வாங்கப்பட்டது, எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டது என்று சொன்னால் உங்களுக்கு சிரிப்பு வரும். டி-சர்ட் பற்றி நான் பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.


Next Story