பிரதமர் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டு தெரிவிக்கும் ராகுல்காந்தி: பா.ஜனதா பதிலடி


பிரதமர் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டு தெரிவிக்கும் ராகுல்காந்தி: பா.ஜனதா பதிலடி
x

பிரதமர் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள ராகுல்காந்தி தெரிவித்து வருவதாக பா.ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, தொழிலதிபர் அதானியின் சொத்துகள் அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டினார். அதற்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது.நாடாளுமன்றத்துக்கு வெளியே பா.ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் மீது அடிப்படையற்ற, வெட்கக்கேடான, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி தெரிவித்து வருகிறார். நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்திய மிகப்பெரிய ஊழல்கள் அனைத்திலும் காங்கிரஸ் தலைவர்கள்தான் ஈடுபட்டுள்ளனர். எனவே, ராகுல்காந்தி, ஊழல் குறித்த தனது நினைவுத்திறனை தட்டி எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. ராகுல்காந்தி, அவருடைய தாய் சோனியாகாந்தி, மைத்துனர் ராபர்ட் வதேரா ஆகியோர் ஜாமீனில் உள்ளனர்.

ஊழல் செய்வதும், ஊழல்வாதிகளை பாதுகாப்பதும்தான் ராகுல்காந்தி மற்றும் அவரது குடும்பத்தின் சரித்திரம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story