மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு
x

ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் சோனியா காந்தியை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் நேரில் சென்று இன்று சந்தித்தனர்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு (வயது 75), கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தொற்று அவருக்கு கடந்த 2-ந் தேதி உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்

இந்த நிலையில் சோனியா காந்தி நேற்று திடீரென டெல்லி சர் கங்காராம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். முதலில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத்தான் அவர் அங்கு அழைத்துச்செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் பின்னர், அவர் கொரோனா தொற்று தொடர்பான பிரச்சினைகளுக்காக அந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் சோனியா காந்தியை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் நேரில் சென்று இன்று சந்தித்தனர்.


Next Story