கார்ப்பரேட்டுகளுக்கு விதிப்பதை விட மக்கள் மீது அதிக வரி விதிக்கும் மோடி அரசு ராகுல்காந்தி குற்றச்சாட்டு


கார்ப்பரேட்டுகளுக்கு விதிப்பதை விட மக்கள் மீது அதிக வரி விதிக்கும் மோடி அரசு ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x

மக்கள் மீது வரியை உயர்த்து. நண்பர்களுக்கு வரியை குறை. இதுதான் சூட்-பூட்-கொள்ளை சர்க்காரின் இயற்கையான செயல்பாடு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மக்கள் மீது வரியை உயர்த்து. நண்பர்களுக்கு வரியை குறை. இதுதான் சூட்-பூட்-கொள்ளை சர்க்காரின் இயற்கையான செயல்பாடு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், கார்ப்பரேட்டுகளிடம் இருந்து பெறுவதை விட மக்களிடம் இருந்து மத்திய அரசு அதிக வருவாய் பெறுவதாக விளக்கும் ஒரு வரைபடத்தையும் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.அதில், கடந்த ஆண்டு, மத்திய அரசுக்கு கார்ப்பரேட்டுகளிடம் இருந்து 24 சதவீத வருவாய் கிடைத்ததாகவும், மக்களிடம் இருந்து 48 சதவீத வருவாய் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story