ராஜஸ்தான் முதல்-மந்திரி கெலாட்டுக்கு காலில் காயம்; மருத்துவமனையில் சிகிச்சை
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூட்டத்தில் கலந்து விட்டு திரும்பும்போது காலில் காயம் ஏற்பட்டு உள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவர் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஜெய்ப்பூரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார்.
அப்போது அவருக்கு காலின் இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் உடனடியாக எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதுபற்றி கெலாட் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், டாக்டரின் அறிவுரையின்படி, ஒரு சில நாட்களுக்கு வீட்டில் இருந்து பணியை தொடர்வேன் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story