ராஜஸ்தானில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
ராஜஸ்தானில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 30 குழந்தைகள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று இரவு குழந்தைகள் இருந்த இரண்டு வார்டுகளில் இருந்து புகை வந்தது. இதனைக் கவனித்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த வார்டுகளில் இருந்த 30 குழந்தைகளையும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.
குழந்தைகள் இருந்த வார்டு சமீபத்தில் கட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டு தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கைலாஷ் மீனா தெரிவித்தார். இந்த சம்பவத்தில் உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story