சகோதரியை காதலிப்பதாக சந்தேகம்; இளைஞரை கொடூரமாக கொலை செய்த சிறுவன்
சகோதரியை காதலிப்பதாக எழுந்த சந்தேகத்தால் 21 வயது இளைஞனை 16 வயது சிறுவன் கொலை செய்துள்ளான்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் பாபாவார் கிராமத்தை சேர்ந்த 21 இளைஞனை அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் கொடூரமான கொலை செய்துள்ளான். இந்த கொலை சம்பவம் கடந்த 2019 மார்ச் 21-ம் தேதி நடந்துள்ளது.
தனது சகோதரியை 21 வயதான அந்த இளைஞன் காதலிப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து அந்த இளைஞனை 16 வயது சிறுவன் கொலை செய்துள்ளான். கொலை செய்யப்பட்ட இளைஞனின் சிதைந்த உடல் பாகங்கள் 8 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 16 வயது சிறுவனை கைது செய்தனர். கைது செய்யபட்ட சிறுவன் கோடா மாவட்ட சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பின்னர், இந்த வழக்கு தொடபான விசாரணை கோடா மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது 19 வயதான கொலையாளிக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், கொலையாளிக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.