பெங்களூருவில் அமைந்துள்ள ராஜாதிராஜ கோவிந்த் கோவில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக மாறும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்


பெங்களூருவில் அமைந்துள்ள ராஜாதிராஜ கோவிந்த் கோவில்  பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக மாறும்-  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
x

பெங்களூருவில் அமைந்துள்ள ராஜாதிராஜ கோவிந்த் கோவில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக மாறும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் அமைந்துள்ள ராஜாதிராஜ கோவிந்த் கோவில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக மாறும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

ராஜாதிராஜ கோவிந்த் கோவில் திறப்பு

பெங்களூரு கனகபுரா ரோட்டில் இஸ்கான் கோவில் நிர்வாகம் சார்பில் ராஜாதிராஜ கோவிந்த் கோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிலை நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

பின்னர் கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக...

பெங்களூருவில் இஸ்கான் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராஜாதிராஜ கோவிந்த் கோவில், திருமலை திருப்பதி கோவிலை போன்றே இருக்கிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவில் அமைந்திருக்கும் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்யலாம். அதற்கான வசதிகள் இந்த கோவிலில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது.

சில கோவில்களை போன்று, இந்த கோவிலும் மிகவும் உயரான இடத்தில் அமைந்துள்ளது. வரும் நாட்களில் ராஜாதிராஜ கோவிந்த் கோவில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக மாறும். கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வருவார்கள். இஸ்கான் நிர்வாகம் அக்சய பாத்ரா திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்த திட்டம் மூலமாக பல கோடி மக்கள் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.


Next Story