மாநிலங்களவை பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைப்பு..!


மாநிலங்களவை பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைப்பு..!
x

மாநிலங்களவை பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி,

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாளான இன்று அவை கூடிய உடன் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 வரை ஒத்தி வைக்கப்பட்டன. அதன்பின்னர் இரு அவைகளும் கூடியது. இந்நிலையில், மாநிலங்களவையில் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story