பட்டதாரி பெண் மிரட்டி கற்பழிப்பு
பெங்களூருவில் பட்டதாரி பெண்ைண மிரட்டி கற்பழித்த நில புரோக்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கே.ஆர்.புரம்:
பெங்களூருவில் பட்டதாரி பெண்ைண மிரட்டி கற்பழித்த நில புரோக்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நில புரோக்கர்
பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவர், பி.பி.ஏ. படித்து முடித்துள்ளார். இதற்கிடையில், கே.ஆர்.புரம் அருகே சிகேஹள்ளியில் இளம்பெண்ணின் தந்தை பெயரில் ஒரு வீட்டுமனை இருந்துள்ளது. அந்த வீட்டுமனைக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, நில புரோக்கரான அசோக்குமார் (வயது 45) மூலமாக தனது தந்தை பெயரில் இருக்கும் வீட்டுமனைக்கு ஆவணங்கள் வாங்க இளம்பெண் முயன்றுள்ளார். அப்போது அசோக்குமாருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கற்பழிப்பு
இந்த நிலையில், ஆவணங்கள் வாங்கி கொடுப்பதாக கூறி இளம்பெண்ணை அசோக்குமார் கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் நடந்த சம்பவங்கள் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக இளம்பெண்ணை அசோக்குமார் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் அசோக்குமார் மீது பட்டதாரி பெண் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அசோக்குமாரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.