மைனர் பெண் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை


மைனர் பெண் பலாத்காரம் செய்த  வாலிபருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மைனர் பெண் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுனை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். அதே பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளைஞர். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர் என்பதால், பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியதாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அந்த வாலிபர் மைனர் பெண்ணை திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் பத்ராவதி காகிதநகர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியானது. அப்போது நீதிபதி வாலிபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை சிவமொக்கா சிறையில் அடைத்தனர்.


Next Story