ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் இன்று தொடக்கம்!
நிதிக் கொள்கைக் குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நிதிக் கொள்கைக் குழு கட்டண உயர்வு நிலைப்பாடு என்ன என்பதை நிதி சந்தைகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) முறைக்கு மாறான கூட்டம் நவம்பர் தொடக்கத்தில் நடைபெற்றது.
பணவீக்க உத்தரவை பராமரிக்க தவறியதற்காக, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கையை உருவாக்க இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய வங்கி அதன் பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட ஆணையை சந்திக்கத் தவறினால், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டமா அமைந்தது.
Related Tags :
Next Story