மகளுக்கு 2-வது திருமணம் செய்து வைத்தவரின் மூக்கு, காதுகளை துண்டித்த உறவினர்கள்


மகளுக்கு 2-வது திருமணம் செய்து வைத்தவரின் மூக்கு, காதுகளை துண்டித்த உறவினர்கள்
x

மகளுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த தந்தை மீது மகளின் முதலாவது கணவர் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தினர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் சோந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்ராம் விஷ்ணோய் (55). இவர் தனது மகள் 3 ஆண்டுகளுக்கு முன் கணவர் வீட்டில் இருந்து திரும்பிவிட்ட நிலையில், மற்றொருவருக்கு 2-வது திருமணம் செய்து கொடுத்தார்.

இதனால் விஷ்ணோய் மீது மகளின் முதலாவது கணவர் குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள், இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த விஷ்ணோய் மீது தாக்குதல் நடத்தி, அவரது மூக்கு, இரு காதுகளை துண்டித்தனர்.

அவருடைய ஒரு காலையும் முறித்தனர். அதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story