ரூ.30 லட்சத்திற்கு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு; ஒருவர் கைது


ரூ.30 லட்சத்திற்கு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு; ஒருவர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.30 லட்சத்திற்கு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்கப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் குந்தாப்புரா தாலுகா சித்தாப்பூர் ஜன்சலேயில் வசிப்பவர் கோவிந்த் ஷெட்டி. இவரது மகன் சஷாங்க்(வயது 21). இவர், குந்தாப்புராவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம்(அக்டோபர்) 31-ந்தேதி காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சஷாங்க் சென்றுள்ளாா். அப்போது கல்லூரிக்கு செல்லும் வழியில் சஷாங்கை, மர்மநபர் காரில் கடத்தி சென்றுள்ளார். அப்போது சஷாங்கின் செல்போனில் அவரது தந்தையை தொடர்பு கொண்ட மர்மநபர் உங்களது மகனை கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.30 லட்சம் கொடுத்துவிட்டு அழைத்து செல்லும்படியும் கூறியுள்ளார். இதனால் பயந்துபோன சஷாங்கின் பெற்றோர், நேற்றுமுன்தினம் மாலை குந்தாப்புரா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஷாங்கை கடத்திய மர்மநபரை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று சஷாங்கை கடத்திய நபர், கொப்பல் மாவட்டம் குஷ்டகியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சஷாங்கை மீட்டு அவரை கடத்திய நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் கைதானவர், தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்த கிரண் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் புகார் அளித்த 24 மணிநேரத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story