ஓராண்டில் அரிசி, கோதுமை,ஆட்டா,சில்லறை விலை 8 முதல் 19 சதவீதம் வரை அதிகரிப்பு


ஓராண்டில் அரிசி, கோதுமை,ஆட்டா,சில்லறை விலை 8 முதல் 19 சதவீதம் வரை அதிகரிப்பு
x

கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்டா ஆகியவற்றின் சராசரி சில்லறை விலைகள் 8 முதல் 19 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி

கடந்த ஓர் ஆண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்டா ஆகியவற்றின் விலை 8 முதல் 19 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் ஆட்டா அல்லது கோதுமை மாவின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 36.2 ஆக இருந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் 19 சதவீதம் அதிகமாகும்.

நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், கோதுமையின் சில்லறை மற்றும் மொத்த விலை குறித்து சேகரித்த தரவுகளின்படி, கோதுமையின் சில்லறை விலை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை ரூ. 27ல் இருந்து ரூ. 31 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல அரிசியின் சராசரி சில்லறை விலை ஒரு கிலோ ரூ.38.2 ஆக உயர்ந்துள்ளது. இதன் விலை கடந்த ஓராண்டில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

முன்னதாக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.5 சதவீதம் உயா்த்தி நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிப்பு வெளியிட்டது. அப்போது பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், தானியங்களின் விலை உயர்வு குறிப்பிடப்பிட்டார்.

உணவுப் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது. நெல் உற்பத்தி குறைவதால் கோதுமை பயன்பாடு அதிகரிக்கும். இதன் விளைவாக கோதுமையின் விலை அதிகரிக்கும். பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதால் காய்கறிகளின் விலை குறிப்பாக தக்காளி விலை அதிகரித்து தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. உணவுப் பொருள்களின் இந்த விலை அதிகரிப்பு, பணவீக்க எதிர்பார்ப்புகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்' என்று கூறினார்.

இந்தியாவின் விவசாயம் சார்ந்த பொருளாதாரத்திற்கு பருவமழை மிகவும் முக்கியமானது, ஏனெனில் நாட்டின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட பாதி நீர்ப்பாசனத்தால் பயன்ப்பெறுகின்றன. ஆனால், இந்த ஆண்டு அக்டோபரில் பெய்யும் அதிகப்படியான பருவமழை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்து. ஏனெனில் இது கோடையில் விதைக்கப்பட்ட நெல் மற்றும் கோதுமை போன்ற பயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.


Next Story