துப்பாக்கியால் சுட்டு ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி தற்கொலை


துப்பாக்கியால் சுட்டு ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி தற்கொலை
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கியால் சுட்டு ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்டார்.

குடகு:

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா கொடுமங்களூரு கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பசவந்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிதர் (வயது 80). ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி. அவர் வயது முதிர்வு காரணமாக இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் தவித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த சசிதர் திடீரென்று தனது கை துப்பாக்கியால் தலையில் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்தனர். அங்கு சசிதர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்த அவர்கள் உடனே இதுகுறித்து குஷால்நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் குஷால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story