நில ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது


நில ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நில ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு சஞ்சய்நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது நிலம் தொடர்பான ஆவணங்களை இ-காத்தா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சஞ்சய் நகர் நாகஷெட்டிஹள்ளி பகுதியை சோ்ந்த வருவாய் ஆய்வாளர் வசந்த்குமாரை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது நில ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியிடம் வசந்த்குமார் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் கூறிய அறிவுரையின் பேரில், அவர் வருவாய் ஆய்வாளர் வசந்த்குமாரை தொடர்புகொண்டு லஞ்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.

அதன்படி, நேற்று முன்தினம் மாலை பூபசந்திரா பகுதியில் வைத்து வசந்த்குமாரிடம் ரூ.5 ஆயிரத்தை சுப்பிரமணி கொடுத்தார். அந்த பணத்தை வசந்த்குமார் வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் வசந்த்குமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

=====


Next Story