சாலை பள்ளங்களை 10-ந் தேதிக்குள் மூட கெடு
சாலை பள்ளங்களை 10-ந் தேதிக்குள் மூட கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சாலை பள்ளங்களை மூடுவதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இரவு, பகலாக சாலை பள்ளங்களை மூடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் இன்னும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை பள்ளங்கள் உள்ளன.
அந்த சாலை பள்ளங்களை வருகிற 10-ந் தேதிக்குள் மூட வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. சாலை பள்ளங்களை மூடாமல் அலட்சியமாக இருக்கும் என்ஜினீயர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story