அரசு வேலை வாங்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி
x

பெங்களூரு: பெங்களூரு சககாரநகர் பகுதியில் வசித்து வருபவர் நாகேந்திர ராவ். இவர் தொழில் அதிபர் ஆவார். இந்த நிலையில் நாகேந்திர ராவுக்கு, பல்லாரியை சேர்ந்தவரும், ராமமூர்த்திநகர் பகுதியில் வசித்து வருபவருமான வெங்கடரெட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நாகேந்திர ராவிடம் தனது சகோதரர் பசவனகவுடா தாவணகெரே மாவட்டம் ஜகலூரில் அரசு அதிகாரியாக பணியாற்றுகிறார். அவரிடம் கூறி உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று வெங்கடரெட்டி கூறியுள்ளார்.

இதனை நம்பிய நாகேந்திர ராவும் தனது உறவினர் ஒருவருக்கு அரசு வேலை பெறுவதற்காக வெங்கடரெட்டி, அவரது சகோதரர் பசவனகவுடாவிடம் ரூ.1 கோடி வரை கொடுத்து உள்ளார். ஆனால் பணத்தை வாங்கி கொண்டு அரசு வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தராமலும் 2 பேரும் மோசடி செய்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து நாகேந்திர ராவ் அளித்த புகாரின்பேரில் ராமமூர்த்திநகர் போலீசார் பசவனகவுடா, வெங்கடரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்கள் 2 பேரையும் தேடிவருகின்றனர்.


Next Story