பாகிஸ்தான் டிரோன் கடத்தி வந்த ரூ.10 கோடி போதைப்பவுடர் பறிமுதல்
பாகிஸ்தான் டிரோன் கடத்தி வந்த ரூ.10 கோடி மதிப்பிலான ஹெராயின் பவுடரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தையொட்டி பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே எல்லை கண்காணிப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது எல்லை தாண்டி பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவியது. உடனே ராணுவத்தினர் அதன் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுட்டு வீழ்ந்தப்பட்ட டிரோனை ராணுவ வீரர்கள் கைப்பற்றி சோதனை செய்தபோது அது போதைப்பொருள் பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரிந்தது. 2 கிலோ எடைகொண்ட ஹெராயின் பவுடரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.10 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story