உப்பள்ளியில் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.10¼ லட்சம் மோசடி


உப்பள்ளியில்  வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.10¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.10¼ லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.10¼ லட்சத்தை மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வியாபாரி

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா புதியஎல்லாப்புரா பகுதியை சேர்ந்தவர் ஜபிமுல்லா. வியாபாரி. இந்தநிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் வீட்டில் இருந்ேத ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனவும், அதற்கு முண்பணம் செலுத்த வேண்டும் எனவும் ஜபிமுல்லாவிடம் கூறியுள்ளார். இதனை ஜபிமுல்லா நம்பி உள்ளார். இதையடுத்து மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்தை ஜபிமுல்லா அனுப்பி உள்ளார். இதையடுத்து அவர் மர்மநபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவரது எண் சுவிட்ச்-ஆப் என வந்தது. இதனால் ஜபிமுல்லா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

ரூ.6 லட்சம் மோசடி

இதேப்போல் உப்பள்ளி டவுன் பைரதேவர கொப்பா பகுதியை சேர்ந்தவர் அமித்ரொல்லி. இவரது எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில், நாங்கள் அனுப்பும் வீடியோக்களுக்கு லைக் மற்றும் அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என அமித்ரொல்லியிடம் அவர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.6 லட்சத்தை அனுப்பி உள்ளார்.

இதையடுத்து மர்மநபர் அனுப்பிய வீடியோக்களை அமித்ரொல்லி லைக் மற்றும் மற்றவர்களுக்கு பகிர்ந்து உள்ளார். ஆனால் மர்மநபர் கூறியபடி அவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமித்ரொல்லி உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த 2 புகார்களின் பேரில் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story