வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்திய ரூ.1½ லட்சம் மரக்கட்டைகள் பறிமுதல்


வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்திய ரூ.1½ லட்சம் மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 May 2022 9:32 PM IST (Updated: 23 May 2022 10:57 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்திய ரூ.1½ லட்சம் மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனக்காவலா் மற்றும் அவரது மகனை கைது செய்தனர்

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் சாகர் அருகே வனப்பகுதியில் இருந்து சிலர் மரங்களை வெட்டி 2 லாரிகளில் கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வனத்துறையினரை பார்த்ததும், லாரிகளில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து வனத்துறையினர், 2 லாரிகளையும், அதில் இருந்த மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்துகொண்டனர். பறிமுதல் செய்த மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்தப்பகுதியை சேர்ந்த வனகாவலர் மஞ்சுநாத்தும், அவரது மகன் மணிகண்டாவும் சேர்ந்து தான் வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி கூட்டாளிகளுடன் லாரிகளில் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story