லஞ்சம் வாங்கியதாக கைதான ரெயில்வே என்ஜினீயர் வீட்டில் ரூ.1.38 கோடி பறிமுதல்
என்ஜினீயர் அருண்குமாருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மேலும் ரூ.1 கோடி ரொக்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வடக்கு ரெயில்வேயில் துணை தலைமை என்ஜினீயராக பணிபுரிபவர் அருண்குமார் மிட்டல். இவர், ரெயில்வே திட்டப்பணி ஒப்பந்தாரர் ஒருவரின் செலவினத்தொகையை அனுமதிப்பதற்கு லஞ்சம் கேட்டதையடுத்து கடந்த 1-ந் தேதி அவரை சி.பி.ஐ. பொறிவைத்துப் பிடித்தது. அப்போது அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.38 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரெயில்வே என்ஜினீயர் அருண்குமாருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மேலும் ரூ.1 கோடி ரொக்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் சுமார் ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பல்வேறு சொத்துகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story