பெங்களூருவில். ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


பெங்களூருவில். ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு-  மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x

பெங்களூருவில். ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெங்களூரு: பெங்களூரு நகரின் மைய பகுதியில் காந்திபஜார் அமைந்துள்ளது. அந்த பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 9 ஆயிரம் சதுர அடி நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அதாவது யரப்பா ரெட்டி என்பவர் அந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடினார். இந்த நில விவகாரம் தொடா்பாக கர்நாடக ஐகோா்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்றும், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும் தீர்ப்பு கூறியது.

ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி, காந்திபஜாரில் 9 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு இருந்த கட்டிடத்தை இடித்து, அந்த நிலத்தை மாநகராட்சி தன்வசப்படுத்தியது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.30 கோடிக்கு மேல் இருக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story