இந்தியாவை முழு உலகிற்கும் முன்மாதிரி சமுதாயமாக மாற்ற ஆர்எஸ்எஸ் உழைத்து வருகிறது- மோகன் பகவத்


இந்தியாவை முழு உலகிற்கும் முன்மாதிரி சமுதாயமாக மாற்ற ஆர்எஸ்எஸ் உழைத்து வருகிறது- மோகன் பகவத்
x

Image Courtesy: ANI 

சமுதாயத்தை ஒருங்கிணைக்க ஆர்எஸ்எஸ் உழைத்து வருவதாக மோகன் பகவத் பேசினார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் நலப்பணிகள் குறித்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசினார். அப்போது அவர், இந்தியா முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரி சமுதாயமாக உருவாகும் வகையில் சமுதாயத்தை ஒருங்கிணைக்க ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பல ஆளுமைகள் சமூகத்தின் தியாகம் மற்றும் நாட்டின் சுதந்திரத்திற்கு பங்களித்து உள்ளனர். சமுதாயத்தை ஒரே அமைப்பாக எழுப்பவும், அதை ஒருங்கிணைக்கவும், ஆர்எஸ்எஸ் தற்போது உழைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியா முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியான சமூகமாக உருவாக முடியும்.

சமூகநலப் பணிகளைச் செய்யும்போது 'எனது, என்னுடையது' என்ற எண்ணம் இல்லாமல் 'நமக்கு' என்ற எண்ணத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது நாம் ஒரு சமூகமாக உருவாக உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story