எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. பா.ஜனதாவை விட்டு விலக மாட்டார்- முன்னாள் மந்திரி ஆர்.அசோக் நம்பிக்கை


எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. பா.ஜனதாவை விட்டு விலக மாட்டார்- முன்னாள் மந்திரி ஆர்.அசோக் நம்பிக்கை
x

எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. பா.ஜனதாவை விட்டு விலக மாட்டார் என்று முன்னாள் மந்திரி ஆர்.அசோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பா.ஜனதவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தமிழகத்திற்கு காவிரை நீரை மாநில அரசு திறந்துவிட்டுள்ளது. தண்ணீரை விட்ட பிறகு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் அரசு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. எஸ்.டி.சோமசேகா் எம்.எல்.ஏ.விடம் நான் பேசி வருகிறேன். அவரும், சிவராம் ஹெப்பாரும் மந்திரியாக பணியாற்றியவர்கள். அவர்கள் பா.ஜனதாவை விட்டு விலக மாட்டார்கள். ஆட்சிக்கு வந்தால் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதாக காங்கிரசார் கூறினார்கள். இப்போது மேகமும் இல்லை, தாதுவும். ஆட்சி அதிகாரம் கிடைத்த பிறகு காவிரியும் இல்லை.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story