ஒடிசா ரெயில் விபத்து அறிந்து வேதனை அடைந்தேன் - ராகுல் காந்தி
ஒடிசாவின் பாலசோரில் கோரமண்டல் விரைவு ரெயில் விபத்துக்குள்ளான சோகச்செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கொரோமண்டல் விரைவு ரெயில் மற்றொரு ரெயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. ரெயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஒடிசாவின் பாலசோரில் கோரமண்டல் விரைவு ரெயில் விபத்துக்குள்ளான சோகச்செய்தியறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மீட்பு பணிகளுக்குத்தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story