சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்..!


சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்..!
x

சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் அப்துல்லா அசம் கான். ராம்பூர் மாவட்டம் சுவார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வழக்கில், 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து நேற்று அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

2008-ல், மத்திய ஆயுதப்படை முகாம் மீது நடந்த தாக்குதலை அடுத்து போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, அசம்கான் மற்றும் ஆதரவாளர்கள் வந்த வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதைக் கண்டித்து நெடுஞ்சாலையில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு எதிராக அந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்புதான் இவரது தந்தையும், மூத்த சமாஜ்வாடி தலைவருமான அசம்கான் அவதூறு பேச்சு குறித்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மகனும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அப்துல்லா அசம்கான் ஏற்கனவே 2019-ம் ஆண்டிலும் ஒருமுறை தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story