கவர்னர் தாவர்சந்த் கெலாட் குடும்பத்துடன் சாமி தரிசனம்


கவர்னர் தாவர்சந்த் கெலாட் குடும்பத்துடன் சாமி தரிசனம்
x

தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா கோவில்களில் மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். சிக்கமகளூருவில் காபி தோட்டங்களையும் அவர் பார்வையிட்டார்.

மங்களூரு, பிப்.16-

கவர்னர் பயணம்

கர்நாடக மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலா மற்றும் குக்ேக சுப்பிரமணியா கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமிதரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் அவர் சிக்கமகளூரு வழியாக தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு சென்றார். வழியில் சிக்கமகளூரு மூடிகெரே பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை குடும்பத்தினருடன் சென்று

பார்வையிட்டார். அப்போது சிவண்ணா என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்ற கவர்னர், அங்கிருந்த காபி, மிளகு செடிகளை பார்வையிட்டார்.

அப்போது அவர் காபி தோட்ட விவசாயிகளிடம், காபி உற்பத்தி குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதசாமி கோவிலுக்கு சென்றார்.

மனைவி அனிதா கெலாட் , மகள், பேரக்குழந்தைகள் உள்பட குடும்பத்தினருடன் சென்ற கவர்னரை, தர்மஸ்தலா தர்மாதிகாரி வரவேற்றார். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.

சாமி தரிசனம்

அதையடுத்து அவர்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தர்மஸ்தலா கோவில் வளாகத்தில் உள்ள அம்ருதவர்ஷினி சபா பவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டார். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் அங்கிருந்து குடும்பத்தினருடன் புறப்பட்ட கவர்னர் தாவர்சந்த் கெலாட் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றார்.

அங்கு குடும்பத்தினருடன் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு பூஜையை முடித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். இந்த பயணத்தின் போது மாவட்ட கலெக்டர் ரவிகுமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் அமதே உள்பட பலர் கவர்னருடன் இருந்தனர்.


Next Story