சாம்ராஜ்நகர் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை பணி இடமாற்றம் வேண்டும்-துணை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை


சாம்ராஜ்நகர் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை பணி இடமாற்றம் வேண்டும்-துணை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகர் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை பணி இடமாற்றம் செய்யவேண்டும் துணை கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொள்ளேகால்:

சாம்ராஜ்நகர் மாவட்ட துணை கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வீடுகள், நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் மாநில அரசு உண்மை நிலவரங்களை ஆய்வு செய்வது இல்லை. புள்ளி விவரங்கள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த விவரங்களை சேகரித்து, உடனே நிவாரணங்களை வழங்கலாம். ஆனால் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதற்கு மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறை வளர்ச்சி திடப்பணிகளை நிறைவேற்றும்போது மாவட்ட மற்றும் தாலுகா, கிராம பஞ்சாயத்து அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தவேண்டும்.

ஆனால் எந்த ஆலோசனை கூட்டமும் இதுவரை நடத்தவில்லை. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வரவேண்டிய திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை. இதை நிறைவேற்றவேண்டும் என்று கூறிய அரசு அதிகாரிகள், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியின் தொல்லை தாங்க முடியாமல் பணி இடமாற்றம் பெற்று சென்றுவிட்டனர். இதனால் மத்திய-மாநில அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்த முடியாமல் தொய்வில் உள்ளது. எனவே மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை பணி இடமாற்றம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story