காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன்..!


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன்..!
x
தினத்தந்தி 15 May 2023 12:59 PM IST (Updated: 15 May 2023 1:13 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சண்டிகர்,

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலின் வாக்குறுதியாக காங்கிரஸ் கட்சி, 'பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம்' எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சில எதிர்ப்புகளை தெரிவித்தன. மேலும், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை போன்று பஜ்ரங் தள் அமைப்பை நிச்சயம் தடை செய்வோம்' எனப் கூறியிருந்தார்.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பி.எப்.ஐ உடன் பஜ்ரங் தள் அமைப்பை தொடர்புப்படுத்தி பேசியதாக ஹிந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ், மல்லிகார்ஜூன கார்கே மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு பஞ்சாப் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.


இந்த நிலையில், இந்த அவதூறு வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு பஞ்சாப் மாநிலம் சங்ரூர் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜூலை 10-ந்தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story