சவுதியில் இருந்து பயங்கரவாத ஆதரவு செயலில் ஈடுபட்ட காஷ்மீரை சேர்ந்தவர் பயங்கரவாதியாக அறிவிப்பு
சவுதியில் இருந்து பயங்கரவாத ஆதரவு செயலில் ஈடுபட்ட காஷ்மீரை சேர்ந்த நபர் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஆசிப் மக்புல் தார் தற்போது சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார். இந்த நபர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பு வைத்துள்ளார்.
மேலும், சவுதி அரேபியாவில் இருந்துகொண்டு சமூகவலைதளம் மூலம் காஷ்மீரில் இருக்கும் இளைஞர்கள் பயங்கரவாத செயலில் ஈடுபட வேண்டும் என்று ஊக்குவிக்கும் செயலில் ஆசிப் மக்புல் தார் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், சவுதியில் இருந்துகொண்டு காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவு செயல்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிப் மக்புல் தாரை மத்திய உள்துறை அமைச்சகம் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story