முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான வழக்கில் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க டெல்லி போலீஸ் ஆணையருக்கு உத்தரவு!


முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான வழக்கில் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க டெல்லி போலீஸ் ஆணையருக்கு உத்தரவு!
x

மனுதாரர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை ஒரு மாத காலத்திற்குள் டெபாசிட் செய்யுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நியமனத்தை எதிர்த்து, ஜெயின் மற்றும் சுவாமி ஓம்ஜி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவானது ஆகஸ்ட் 24,2017 இல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மனுதாரர்கள் இருவரும் உள்நோக்கத்துடனும் விளம்பரத்திற்காகவும் இந்த வழக்கை தொடுத்தனர் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்யும் போது, கோர்ட்டு நேரத்தை வீணடித்த இரண்டு மனுதாரர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை ஒரு மாத காலத்திற்குள் டெபாசிட் செய்யுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது, அந்த தொகை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், மனுதாரரில் ஒருவர் மறைந்துவிட்ட நிலையில், இன்னும் அபராத தொகையை அவர்கள் தரப்பில் செலுத்தவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஜே.பி. பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், முகேஷ் ஜெயின் மறும் மறைந்த ஸ்வாமி ஓம் ஜியுடன் ஆகியோர் ஒரு அற்பமான வழக்கைத் தொடர்ந்தனர்.

கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி, டெல்லியில் உள்ள முகேஷ் ஜெயினின் அசையா சொத்துக்களில் இருந்து முகேஷ் ஜெயின் மீது விதிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை, நில வருவாயின் நிலுவைத் தொகையாக வசூலிக்க டெல்லி காவல்துறை ஆணையர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டெல்லி போலீஸ் கமிஷனர் இதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அபாராதம் செலுத்தப்பட்டதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story