கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x

கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் 50 நாள் சிறை வாசத்திற்கு பின் வெளியே வந்தார். தற்போது தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் துணைநிலை கவர்னர் வேண்டுமானால் தலையிடட்டும், நாங்கள் இதில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக, கெஜ்ரிவாலை பதவிநீக்கம் செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், விளம்பரத்துக்காக நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story