பிரதமர் மோடியின் பெங்களூரு பயண விவரம்


பிரதமர் மோடியின் பெங்களூரு பயண விவரம்
x

பிரதமர் மோடியின் பெங்களூரு பயண விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) பெங்களூரு வருகிறார். இதற்காக அவர் காலை 6.20 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறார். காலை 9.40 மணிக்கு விதான சவுதா எம்.எல்.ஏ.க்கள் பவனில் உள்ள கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு அவர் காலை 10.20 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் சென்னை-மைசூரு இடையேயான வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவை, கவுரவ பாரத் காசி ஆன்மிக சுற்றுலா ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பிறகு அங்கிருந்து சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மோடி, காலை 11.20 மணிக்கு 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அதே வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கெம்பேகவுடா வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். அதன் பிறகு மதியம் 12.20 மணிக்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசுகிறார். அங்கு ஒரு மணி நேரம் இருக்கும் அவர், பின்னர் மதியம் 2 மணிக்கு அங்கிருந்து தனி விமானம் மூலம் தமிழ்நாட்டின் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்.


Next Story