ஸ்கூட்டர் தீப்பிடித்து விவசாயி கருகி பலி


ஸ்கூட்டர் தீப்பிடித்து விவசாயி கருகி பலி
x

மண்டியாவில் ஸ்கூட்டர் தீப்பிடித்து விவசாயி உடல் கருகி உயிரிழந்தார்.

மண்டியா:

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா ரக்சகுப்பே கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை ஸ்கூட்டரில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று ஸ்கூட்டரில் பிடித்த தீ பயணம் செய்த 2 பேர் மீதும் பிடித்து எரிந்தது. இதனால் வலியால் அலறிதுடித்த அவர்களை அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்டனர். பின்னர் இருவரும் மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் விசாரணையில், பலியானவர் விவசாயியான சிவராமய்யா என்பதும், காயமடைந்தவர் அனந்தராமய்யா என்பதும், மைசூரு சேர்ந்த இவர்கள் ஸ்கூட்டரில் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே கே.பெட்டதஹள்ளி கிராமத்திற்கு வரும் போது திடீரென்று தீப்பிடித்து எரிந்ததும் தெரியவந்தது. விபத்து பற்றி ஸ்ரீரங்கப்பட்டணா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story