ஸ்கூட்டர்-லாரி மோதல்; கல்லூரி மாணவி சாவு பெங்களூருவை சேர்ந்தவர்


ஸ்கூட்டர்-லாரி மோதல்; கல்லூரி மாணவி சாவு  பெங்களூருவை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் ஸ்கூட்டர்-லாரி மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

கோலார் தங்கவயல்

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் சைத்ரா (வயது 19). இவர் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இந்த நிலயைில் சைத்ரா, தனது நண்பர் லிகித் கவுடா என்பவருடன் ஸ்கூட்டரில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தூனரில் உள்ள சீனிவாச சாகர் தடுப்பணைக்கு ெசன்றார். பின்னர் அவர்கள் திரும்பி ஸ்கூட்டரில் பெங்களூரு நோக்கி ெசன்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் கவுரிபித்தனூர் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சைத்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லிகித் கவுடா பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து கவுரிபித்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story