கேரளாவில் ஸ்டீல் வெடிகுண்டு வெடித்து தந்தை- மகன் பலி
கேரளாவில் வீட்டில் ஸ்டீல் வெடிகுண்டு வெடித்ததில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்தனர்.
கண்ணூர்
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மட்டனூர் பகுதியில் அசாமை சேர்ந்த 5 பேர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பழைய இரும்புப்பொருட்கள், பழைய பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கி தரம் பிரித்து விற்பனை செய்து வந்தனர்.
நேற்று மாலை முதலாவது தளத்தில் பசல் ஹக் என்பவரும் அவரது மகன் ஷஹீதுல்லும் தாங்கள் சேகரித்த பொருட்களில் இருந்த இரும்பு பாத்திரம் ஒன்றை திறந்துள்ளனர்.
அப்போது அந்த பாத்திரம் வெடித்துச் சிதறியதில் இருவரும் உயிரிழந்தனர். மட்டனூர் போலீசார் நடத்திய விசாரணையில் வெடித்தது ஸ்டீல் வெடிகுண்டு என தெரியவந்ததையடுத்து, இரும்பு பாத்திரம் எங்கிருந்து வந்தது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story