உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2¾ கோடி தங்க நகைகள், கார் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2¾ கோடி தங்க நகைகள், கார் பறிமுதல்
x

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2¾ கோடி தங்க நகைகளையும், அவற்றை எடுத்து வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

கோலார் தங்கவயல்:

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2¾ கோடி தங்க நகைகளையும், அவற்றை எடுத்து வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகாவில் உள்ள தேசிய நெடுஞ்சாைலயில் சுங்கேனஹள்ளி கிராமம் அருகே சட்டசபை தேர்தலையொட்டி சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சுங்கேனஹள்ளி மார்க்கமாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை வழிமறித்து போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.

தங்க நகைகள் பறிமுதல்

அப்போது காரின் இருக்கைக்கு அடியில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதாவது ரூ.2.65 கோடி மதிப்பிலான தங்கநகைகள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து கார் டிரைவரிடம், தங்க நகைகளுக்கான உரிய ஆவணங்களை போலீசார் கேட்டனர். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதையடுத்து ரூ.2.65 கோடி தங்க நகைகளையும், அதை கொண்டு வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கார் டிரைவர் மஞ்சுநாத் என்பவரையும் கைது செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story