குஜராத்: இந்திய எல்லையில் மீன்பிடித்த பாக். மீனவா்களின் 3 படகுகள் பறிமுதல்


குஜராத்: இந்திய எல்லையில் மீன்பிடித்த பாக். மீனவா்களின் 3 படகுகள் பறிமுதல்
x

Image Courtesy: ANI 

தினத்தந்தி 23 Jun 2022 12:15 PM GMT (Updated: 23 Jun 2022 2:53 PM GMT)

குஜராத்தின் கட்ச் கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த பாகிஸ்தான் மீனவா்களின் 3 படகுகளை எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் பறிமுதல் செய்து உள்ளனா்.

அகமதாபாத்,

குஜராத்தின் கட்ச் கடற்பகுதி இந்தியா-பாகிஸ்தான் எல்லைபகுதியில் அமைந்து உள்ளது. இந்த எல்லை பகுதியில் இருந்து சுமார் 15-20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள "ஹராமி நல்லா" என்ற சிற்றோடை பகுதி உள்ளது. இந்த பகுதியில் மீன்பிடிக்க இந்திய அரசு தடைவிதித்துள்ளது.

இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அங்கு சில படகுகள் நடமாடுவதை எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் கவனித்தனா். அந்த பகுதியில் சென்று பார்த்த போது பாகிஸ்தானை சேர்ந்த 3 படகுகள் அங்கு நின்று கொண்டிருந்தது. அந்த படகுகளை பாதுகாப்பு படை வீரா்கள் பறிமுதல் செய்தனா்.

தடைசெய்யப்பட்ட இந்த பகுதிகளில் சட்டவிரோதமாக நுழைந்து பாகிஸ்தான் மீனவா்கள் மீன் பிடித்து வருகின்றனா். மீன்பிடிக்கும் போது இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரா்களின் ரோந்து படகுகளை பாா்த்தால் தங்கள் படகுகளை அங்கேயே விட்டு விட்டு மீனவா்கள் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிடுவதாக பாதுகாப்பு படை அதிகாாிகள் தொிவித்தனா்.


Next Story